Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 24 நவம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப் படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் வசித்து வரும் அதிமுக பிரமுகரான வட மாநிலத்தை சேர்ந்த சர்வான் பொஹரா என்பவர் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என வேண்டி விரதம் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தியுள்ளார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் எனவும் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் அனைத்து பகுதிகளையும் அதிமுக கைப்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவர் அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு நிறைவேறும் என்றும் கூறி அங்கிருந்து பேசி வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டி உள்ளூர் கோவில்களில் வழிபாடுகள் மற்றும் சிறப்பு யாகங்கள் செய்து வரும் நிலையில் கோவை அதிமுக பிரமுகர் உத்தரகாண்டில் உள்ள ஆசிரமத்தில் நடத்தியுள்ள வழிபாடு அக்கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan