Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 24 நவம்பர் (ஹி.ச.)
கள ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 25, 26 ஆம் தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு கோவையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்பணிகள் அனைத்தும் நிறைவுற்று விட்டன. நாளை 25 ஆம் தேதி காலையில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள கோவை செம்மொழி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
அன்று மாலை தொழில்துறை சார்பில் டி.என் ரெய்ஸ் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன.
26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ஜெயராம் புரத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான மாவீரன் பொல்லானின் உருவ சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். ஈரோடு மாவட்டம் நல்ல மங்கல பாளையத்தில் பிறந்த பொல்லான் 18 ஆம் நூற்றாண்டில் தீரன் சின்னமலையின் போர்படையிலும் ஒற்றர் படையிலும் தளபதியாக திகழ்ந்தவர்.
ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் ஹாரிஸ் வீரர்களால் ஓடாநிலை கோட்டைக்கு அருகில் ஜெயராமபுரத்தில் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீர வரலாற்றை மீட்பு குழு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையை ஏற்று ரூபாய் 490 கோடி மதிப்பில் இந்த அரங்கம் திறந்து வைக்கிறார்
Hindusthan Samachar / V.srini Vasan