Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.)
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மேம்பட்ட நடுத்தர ஏவுகணை மற்றும் பிரளய ஏவுகணைக்காக உருவாக்கப்பட்ட முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியத் தொழிற்சாலைகளுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.
இதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறனை பல மடங்கு உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மேம்பட்ட நடுத்தர ஏவுகணைகளின் வேகம் மற்றும் கட்டமைப்பு வலிமை அதிகரிக்கப்படும்.
வெளிநாட்டு சார்பில்லாமல், உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு மணிக்கு 2,500 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன்கள் கொண்ட இரட்டை இன்ஜின்களைக் கொண்ட 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது
10 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் தன்மை கொண்டுள்ள இந்த விமானம், தொலைதூர தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது.
இந்த அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட மேம்பட்ட நடுத்தர ஏவுகணைகள், அமெரிக்காவின் எப்35 மற்றும் சீன போர் விமானங்களை மிஞ்சிய செயல்திறன் மற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM