Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 24 நவம்பர் (ஹி.ச.)
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று
(நவ. 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
இந்நிலையில் மத்திய அரசின் நிராகரிப்பைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN