ரூ. 11.81 கோடியில் உருவான அம்பத்தூர் தொழிற் பேட்டை பேருந்து நிலையம் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.) ரூ. 11.81 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலைய திறப்பு விழா இன்று (நவ 24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்
ரூ. 11.81 கோடி உருவான அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)

ரூ. 11.81 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலைய திறப்பு விழா இன்று (நவ 24) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

மேலும் பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 16 புதிய தாழ்தள பேருந்துகள் மற்றும் 35 மகளிர் விடியல் திட்ட புதிய பேருந்துகள் என மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் அம்பத்தூர் பேருந்து பணிமனை சார்பில் தினந்தோறும் 53 வழித்தடங்களில் 75 விடியல் பயணத் திட்ட பேருந்துகள், 49 டீலக்ஸ் பேருந்துகள், 15 சிறிய பஸ்கள் என மொத்தம் 139 பஸ்கள் மூலமாக 2,026 நடைகள் இயக்கபட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அம்பத்தூர் பஸ் பணிமனை உள்பட அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் அம்பத்தூர் பேருந்து நிலையம் வழியாக செல்லும் மொத்தம் 81 வழித்தடங்களில் 287 பேருந்துகள் மொத்தம் 3,126 நடைகள் பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b