Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்டுகள், நாம் தமிழர் என எட்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
இன்று நடைபெற்ற இந்த கூட்டம் காலம் கடந்து நடந்த கூட்டம் என்ற அவர் வாக்காளர் விண்ணப்பம் படிவங்கள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் பல இடங்களில் இன்டர் நெட் சர்வர் டவுன்னாக உள்ளது, இதன் காரணம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.
மேலும் முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவம் முறையாக வழங்கப்படவில்லை என்ற அவர் கள்ள ஓட்டுகளையும், இறந்தவர்களை நம்பியே திமுக உள்ளது என அவர் விமர்சித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ