கனமழை எதிரொலி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வுகள் இன்று ஒத்திவைப்பு
திருநெல்வேலி, 24 நவம்பர் (ஹி.ச.) அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது
கனமழை எதிரொலி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வுகள் இன்று ஒத்திவைப்பு


திருநெல்வேலி, 24 நவம்பர் (ஹி.ச.)

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகை, கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய 17 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,24) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று

(நவ 24) நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று

பல்கலைக்கழக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b