சீக்கிய மதகுரு தேவ்பஹதுார் 350-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஹரியானா, டில்லியில் நாளை அரசு விடுமுறை
புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.) சீக்கிய மதகுரு தேவ்பஹதுார் 350வது நினைவு தினத்தை முன்னிட்டு, டில்லி மற்றும் ஹரியானாவில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சீக்கிய மதகுரு த
நாளை சீக்கிய மதகுரு தேவ்பஹதுார் 350வது நினைவு தினத்தை முன்னிட்டு ஹரியானா, டில்லியில் அரசு விடுமுறை அறிவிப்பு


புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.)

சீக்கிய மதகுரு தேவ்பஹதுார் 350வது நினைவு தினத்தை முன்னிட்டு, டில்லி மற்றும் ஹரியானாவில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

சீக்கிய மதகுரு தேவ் பஹதுார் சாஹிப்பின் தைரியம், இரக்கம் மற்றும் நம்பிக்கை காலத்தால் அழியாதது. அவரது சிந்தனைகள் அனைத்து இன மக்களையும் வழி நடத்தி வருகிறது.

டில்லி அரசு சார்பில் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு செங்கோட்டை வளாகத்தில் குரு தேவ் பஹதூரின் 350வது தியாக நினைவு தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தேவ் பஹதுார் நினைவு தினத்தை முன்னிட்டு, டில்லி அரசின் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதே போல, அண்டை மாநிலமான ஹரியானா அரசும் நாளை விடுமுறை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM