Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூத்-நிலை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிக்கின்றனர். எந்த வாக்காளர்களும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய, வாக்காளர் பட்டியலில் உள்ள அவரவர் தங்களின் பெயர்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், ECI விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும். எனவே, வாக்காளர் பட்டியலை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?, அதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
வாக்காளர் பட்டியலை எவ்வாறு பதிவிறக்குவது?
* இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லுங்கள். அதில், PDF E-Roll என்ற ஆப்சன் இருக்கும்.
* அந்த இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியலுக்கான இணைப்புகளைக் கொண்ட ஒரு பக்கம் திறக்கும். நீங்கள் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைக் கிளிக் செய்யவும்.
* நீங்கள் வசிக்கும் மாநிலத்தைக் கிளிக் செய்யவும். அடுத்து, அந்த மாநிலத்தின் கீழ் வரும் மாவட்டங்களின் பட்டியலைக் காண்பீர்கள். நீங்கள் வசிக்கும் மாவட்டத்தைக் கிளிக் செய்யவும்.
* மாவட்டத்தின் பெயரைக் கிளிக் செய்த பிறகு, பக்கத்தில் தொகுதிகளின் பெயர்களின் பட்டியலைக் காண்பீர்கள். நீங்கள் வாக்களிக்கப் பதிவுசெய்யப்பட்ட தொகுதியின் பெயரைக் கிளிக் செய்யவும்.
* அடுத்து, அந்தத் தொகுதியைச் சேர்ந்த வாக்குச் சாவடிகளின் பட்டியலைக் காண்பீர்கள். உங்கள் வாக்குச் சாவடிக்கு அடுத்துள்ள 'இறுதிப் பட்டியல்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* நீங்கள் வாக்களிக்கும் பட்டியலைப் பார்க்கவும், வாக்காளர் ஐடியைப் பதிவிறக்கவும் முடியும்.
* உங்கள் EPIC அட்டை விவரங்களை உள்ளிட்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரையும் சரிபார்க்கலாம். அதற்கு உங்கள் EPIC எண் தேவைப்படும்.
உங்கள் பெயரை எவ்வாறு தேடுவது?
இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ இதே வெப்சைட்டில் Search your name in E-roll என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து, உங்கள் EPIC எண், பிற விவரங்களை உள்ளிட்டு, 'Search' ஆப்சனை கிளிக் செய்யவும். உங்கள் பெயர் வந்துவிடும்
வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவது எப்படி?
https://voters.eci.gov.in/ இந்த வெப்சைட்டில் E-EPIC Download’ என்ற ஆப்சனுக்கு சென்று 'EPIC எண்' ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
அதில், EPIC எண் டைப் செய்து உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து Search கொடுக்கவும். உங்கள் வாக்காளர் அடையாள விவரங்கள் திரையில் தோன்றும். 'send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
OTP-ஐ உள்ளிட்டு ‘verify’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்க ‘e-EPIC-ஐப் பதிவிறக்கு’ என்பதைக் கிளிக் செய்யவும். வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோடு ஆகும்.
Hindusthan Samachar / JANAKI RAM