பெண் வேடம் அணிந்து சிறுவனை கடத்த முயன்ற நபர் கைது
திருவள்ளூர், 24 நவம்பர் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு எஸ்.பால் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் பவனேஷ் உடன் வசித்து
Kadambattur Police Station


திருவள்ளூர், 24 நவம்பர் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அங்கு எஸ்.பால் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் பவனேஷ் உடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், காலை பேக் விற்பனை செய்வதுபோல் வந்த பெண் ஒருவர், வீட்டில் இருந்த சிறுவனை கடந்த முயற்சி செய்தார். இதனை பார்த்த சிறுவனின் தந்தை மகனை காப்பாற்ற முயற்சித்தார். இதனால், அந்த பெண் சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு, பால்குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதில், குமாருக்கு தாடையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்றார்.

இதற்கிடையில், இதுகுறித்து தகவல் அறிந்த பானம்பாக்கம் கிராம மக்கள், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வடமாநில நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

விசாரணையில், அந்த நபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அமித் குண்டல் என்பது தெரியவந்தது. மேலும், இந்த நபர்தான் பெண் வேடம் அணிந்து சிறுவனை கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இந்த நபரை அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், அதே நபர் பெண் வேடம் அணிந்து சிறுவனை கடத்த முயன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து அதிருப்தியில் இருந்த செஞ்சி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கடம்பத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சிறுவனைன் தந்தை பால் குமார் கூறுகையில்,

எனது மகனை கடத்த முயன்றபோது நான் தடுத்ததால் என்னை தாக்கிவிட்டு அந்த நபர் தப்பிச்சென்றார்.

தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN