கரூர் துயர சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் ஆஜர்
கரூர், 24 நவம்பர் (ஹி.ச.) கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வச
கரூர் துயர சம்பவம் -  சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் ஆஜர்


கரூர், 24 நவம்பர் (ஹி.ச.)

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது, விசாரணை கடந்த மாதம் 17 முதல் தொடர்கிறது.சிபிஐ அதிகாரிகள், கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள், ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றிகழகத்தின் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் சிசிடிவி ஆதாரங்களை கேட்டு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் இன்று (நவ 24) சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கரூர் சம்பவம் குறித்து தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b