புரிதலுடன் மாணவர்கள் படிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது - அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.) பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - ன் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சென்னை கோட்டூர்புரத்தில் உ
Anbil Mahesh


சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)

பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - ன் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

புதிய பாடத்திட்டத்தை நல்ல பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்கிற அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது.

தற்போது எங்கள் துறை சார்ந்து பாடங்களில் என்னென்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று இன்றைய கூட்டத்தில் கூறினோம்.கற்றலும் கற்பித்தலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

பள்ளியில் இருக்கும் அளவிற்கு கூட கல்லூரியில் கற்றல் இல்லை. பள்ளியில் பைத்தான் இருக்கும் போது கூட கல்லூரியில் பற்றி பேசவில்லை என பல கருத்துகள் கூறியிருக்கிறார்கள்.

புரிதல் உடன் மாணவர்கள் படிக்கிறார்களா என்பது உறுத்திப்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது

மார்ச் 2026 வரைக்கும் இதுபோல் கூட்டம் நடக்கும்.

*2026 - 2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர திட்டம்...அதன்பிறகு 4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு அதன் பிறகு 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொண்டுவர திட்டம்.படிப்படியாக இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

வரலாறு பாடத்தில் கூட அறிவியல் ,கணிதம் சார்ந்து தகவல்களை கற்றுக்கொள்ள பாடத்தில் இணைக்க முடியும் என பல்வேறு கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

படிக்கும் படிப்புக்கு என்ன பயன் இருக்க போகிறது என்பது குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்கும் அளவுக்கு பாடத்திட்டத்தில் இடம்பெறும்.தற்கால தொழில்நுட்பம் சார்ந்து ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க போகிறோம்.

கொரோனா காலத்திற்கு பிறகு எதுவெல்லாம் மாறி உள்ளது எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை முழுமையாக உணர்ந்து இந்த ஆலோசனை கூட்டம் இருந்தது.அடுத்த பத்தாண்டுகளுக்கு நம் பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறோம்.

தமிழ் பாடம் படித்தால் வேலை வாய்ப்பு இருக்கிறது என்று எப்படி சொல்லிக் கொடுப்பது என்று கூட எப்படி கொண்டு வர உள்ளோம். ஏற்கனவே நான் முதல்வன் திட்டம் செயல்பட்டு வருகிறது.

முதல்முறையாக மாநில கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களும் எங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களிடம் இருக்கும் விஷயங்களை நாங்களும் தெரிந்து கொள்கிறோம் என்ற புரிதலோடுதான் இந்த ஆலோசனை கூட்டம் இருந்தது.இது தொடக்க நிலை ஆலோசனை கூட்டம் தான்.

முதற்கட்ட வரைவு அறிக்கை டிசம்பர் மாதத்தில் கொண்டு வரப்படும் எந்தெந்த வகுப்புகளுக்கு என்று பிறகு சொல்லப்படும்.

அறிவியலுக்கு அப்பாற்பட்டு பாடத்திட்டங்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் இருப்பதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு ,

பகுத்தறிந்து எப்படி பாடம் நடத்துவது என்று இருக்கிறது.

கருத்து பகுத்தறிந்து பார்க்க வேண்டிய கருத்தாக இருக்க வேண்டும் யாருக்கும் எதிரான விஷயம் கிடையாது. யாருக்கும் எதிரானவர்கள் நாங்கள் கிடையாது பகுத்தறிந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் 500 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என நாங்கள் முடிவு செய்துள்ளோம் ஆனால் 250 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கேட்கின்றனர்,அது குறித்து ஆலோசிக்கப்படும். சிறப்பு டெட் தேர்வு குறித்த கேள்விக்கு,

சிறப்பு ஆசிரியர்கள் தகுதி தேர்வு தொடர்பாக முதலமைச்சரிடம் பேசியிருக்கிறாம்.தேர்வை நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

நீதி மன்றத்தில் நமது தரப்பில் சிறந்த வாதங்களை முன்வைத்துள்ளோம்.மத்திய அமைச்சரை சந்தித்து பேச வேண்டும்.

மத்திய அரசுடன் பேசிய பிறகு முடிவு செய்யப்படும்.

Hindusthan Samachar / P YUVARAJ