Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 24 நவம்பர் (ஹி.ச.)
கோவை, பெரிய கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில்.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது இந்தத் திருக்கோவிலில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இதில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, திருவிளக்கு பூஜை, கோ பூஜை போன்ற பல்வேறு பூஜைகள், ஹோமம் நடத்தினர். மேலும் தீர்த்த குடம், முளைப்பாலிகை திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதில் மேளதாளம் முழங்க ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மனின் சிறப்புகள் குறித்து விளக்கும் கோவில் பூசாரி...
உலக செம நலம் பெற வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டும் எனவும், அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் மாகாளியம்மன் சிறப்பு பூஜைகள் உலக மக்களுக்காக வேண்டி நடைபெற்று வருவதாக கூறியவர், இந்த கும்பாபிஷேகத்தின் வாயிலாக உலக மக்கள் ஒற்றுமை பெற வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து உள்ளதாகவும் தெரிவித்தவர், இங்கு வரும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கி, வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றுவதாகவும் கூறியவர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமை இந்த மாகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் என்றவர், அந்த நாளில் அம்மன் கண்ணீர் விடுவதையும், அப்பொழுது மழை பொழியும் என்றும் அதனை அனைத்து பக்தர்களும் பார்த்து வருவதும், இந்த அம்மனின் சிறப்பு என்று மாகாளியம்மன் சிறப்புகள் குறித்து கூறியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan