Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026-ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 23 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2026-ல் இந்த நாள்களில் ரேஷன் கடைகள் இயங்காது.
2026-ம் ஆண்டு விடுமுறை பட்டியல் :
ஜனவரி 1: ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15: பொங்கல் பண்டிகை
ஜனவரி 16: திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17: உழவர் திருநாள்
ஜனவரி 26: குடியரசு தினம்
பிப்ரவரி 1: தைப்பூசம்
மார்ச் 19: தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி)
மார்ச் 21: ரம்ஜான்
மார்ச் 31: மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 3: புனித வெள்ளி
ஏப்ரல் 14: தமிழ் புத்தாண்டு
மே 1: மே தினம் (தொழிலாளர் தினம்)
மே 28: பக்ரீத்
ஜூன் 26: மொஹரம்
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26: மிலாடி நபி (Mawlid)
செப்டம்பர் 4: கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 4: விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி
அக்டோபர் 19: ஆயுத பூஜை
அக்டோபர் 20: விஜயதசமி
நவம்பர் 8: தீபாவளி
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்
ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் கடை பணியாளர்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில், மொத்தம் 23 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த விடுமுறைப் பட்டியலைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பட்டியலைத் தவிர, கூடுதல் உள்ளூர் விடுமுறைகள் எதையும் முறையான அனுமதி இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அந்தச் சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ