தென்காசி மாவட்டத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தென்காசி, 24 நவம்பர் (ஹி.ச.) தென்காசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பேருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்டவர்களில்
தென்காசி மாவட்டத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்


தென்காசி, 24 நவம்பர் (ஹி.ச.)

தென்காசியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பேருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்டவர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b