Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாகக் கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (நவ 24 ) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
தமிழகத்தில் சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 50% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டுத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்து அவற்றை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீதம் உள்ளவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். தற்போதைய சூழலில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்குவதற்கான கால நீட்டிப்பு கிடையாது. எஸ்.ஐ.ஆர் பணிகளை எஸ்.ஐ.ஆர். பணியில் 2.43 லட்சம் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்துள்ளவர்கள் படிவம் 8ஐ கொடுத்து தமிழகத்தில் வாக்காளர்களாக இணையலாம். அதன்படி தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த 869 பேர் இதுவரை வாக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b