Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 25 நவம்பர் (ஹி.ச.)
கோவை சிவானந்தா காலனி அருகில் உள்ள பவர் ஹவுஸ் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர்கள் காங்கிரஸ் கட்சியின் எஸ் எம் எஸ் இன் பிரிவு ஐக்கிய சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இரா கண்ணன் மண்டல செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை க. வீராசாமி சிறப்புரையாற்றினார்.
மாநில அமைப்பு செயலாளர். கா இளங்கோவன் மாநில செயலாளர் ரங்கநாதன் ஜெயக்குமார் பூவாணி மண்டல மகளிர் அணி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திட பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட 47600 கலைப் பணி காலிடங்களை ஐடிஐ படித்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பண்டகக்காப்பாளர்கள் நிலை இரண்டு பதவிகளை உள்முகத் தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் டி சி ஆர் சி தமிழக அரசு ஆணையை பின்பற்றி 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த வேண்டும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துரிதப்படுத்தி உடனடி முடிவுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் . இடைக்கால நிவாரணமாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மின் ஊழியர்கள் நடத்தினார்கள்.
இதில் நூற்றுக்கணக்கான மின் ஊழியர்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan