Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மார்க்கமாக வந்து செல்லும், திருப்பதி-மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு ரெயில், பண்ருட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம், அந்த பகுதி மக்கள் சார்பாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையினை ரெயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக பாமணி விரைவு ரெயில் பண்ருட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக எல்.முருகன் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘பாமணி விரைவு ரெயில், பண்ருட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பின்மூலம் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் பலனடைவார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இந்த அறிவிப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும், தமிழக மக்கள் சார்பாகவும், பண்ருட்டி பகுதிவாழ் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்று கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM