Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 25 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருவதனால் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் நீரானது செந்நிறத்தில் அபாய அளவை தாண்டி வந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கல்வராயன்மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ள நிலையில் விரைவில் பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b