Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மேயர் ஆர். பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 28.11.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இம்மாமன்ற கூட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
வருகின்ற 28.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாமன்றக் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b