சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை அகலப்படுத்த திட்டம் - பேருந்துகள் செல்வதற்கான தனி வழித்தடம் அமைக்க நிலம் அடையாளம் காணும் பணிகள் துவக்கம்
சென்னை, 25 நவம்பர் (ஹி.ச) தமிழகத்தைப் பொருத்த வரை 2.20 கோடிக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள், 23.80 லட்சத்துக்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள், 8,600 க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள், 21 ஆயிரத்து 800 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Road


சென்னை, 25 நவம்பர் (ஹி.ச)

தமிழகத்தைப் பொருத்த வரை 2.20 கோடிக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள், 23.80 லட்சத்துக்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள், 8,600 க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள், 21 ஆயிரத்து 800 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை விட, தனிநபா் போக்குவரத்து வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது தெரிய வருகிறது.

எனவே பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக தலைநகா் சென்னையில் துரித பேருந்து சேவை திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடா்பாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையே சென்னை விரிவான இயக்க திட்டம் CMP ( 2023 - 2048 ) அறிக்கை அடிப்படையில் ஏர் டெக்ஸி , வாட்டர் மெட்ரோ , மெட்ரோ ரயில் 3வது கட்ட திட்டம் என பல அம்சங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

அதில் பிரதானமாக 3 சாலைகள் தமிழக அரசு சார்பில் BRTS ( பேருந்துகள் செல்வதற்கான தனி வழித்தடம் அமைக்க ) மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

அதன்படி 23 கிமீ தூரம் கொண்ட பிராட்வே - பூந்தமல்லி ஈவேரா சாலை , 12 கிமீ தூரம் கொண்ட நீலாங்கரை - பல்லாவரம் சாலை , வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஆகிய 3 சாலைகளில் 2048 க்குள் BRTS ( Bus Rapid Transit System ) கொண்டு வருவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது .

CMP பரிந்துரை அடிப்படையில் பேருந்துகள் செல்வதற்கான தனி வழித்தடம் அமைக்க தற்போதுள்ள சாலைகள் அகலமானது குறைந்தபட்சம் 30 மீட்டர் வரை இருப்பதை உறுதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது .

அதன்படி பிராட்வே பூந்தமல்லி சாலை மட்டும் ஆங்காங்கே 20 மீட்டர் 45 மீட்டர் வரை அகலம் கொண்டதாக உள்ளது , எனவே குறைவான அகலம் கொண்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிலங்கள் தொடர்பான விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை இறங்கி உள்ளது .

நிலம் அடையாளம் காணும் பணிகள் நிறைவு பெற்ற பின் பேருந்துகளுக்கான தனி வழித்தடம் அமைக்கும் BRTS திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தபுள்ளி கோரபட்டு நில உரிமையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி சாலையை முழுமையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

நாட்டின் பல்வேறு நகரங்களில் பேருந்துகளுக்கான தனி வழித்தடம் அமைப்பு செயல்பட்டு வரும்ங்களையும் தமிழகத்தில் முதல் BRTS சாலையாக EVR சாலை மாறவுள்ளது .

பேருந்துகள் செல்வதற்கான முன்னுரிமை வழித்தடம் அமைப்பது மூலம் குறிப்பிட்ட இந்த சாலையில் 23 கிலோமீட்டர் தூர பயணத்தில் அலுவல் நேரங்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு 20 வினாடிகளுக்கும் ஒரு பேருந்து செல்லும் வகையில் 1 மணி நேரத்தில் 9400 க்கு அதிகமானோர் பயணப்பட முடியும் என CMP அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது .

இதைத்தவிர கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஊரப்பாக்கத்தில் இருந்து மகேந்திரா சிட்டி வரை 18.4 கிலோமீட்டர் நீளத்திற்கு சுமார் 3300 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை துறையால் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது

தற்போது இந்த பாலத்தின் அகலம் BRTS திட்டத்திற்கு ஏற்ப 29 மீட்டர் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த உயர்மட்ட பாலத்தில் இருபுறத்திலும் பேருந்துக்கான தனி வழித்தடம் வரை இருப்பது குறிப்பிடத்தக்கது .

Hindusthan Samachar / P YUVARAJ