Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 25 நவம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சதுரகிரி மலையில் ஓடுகின்ற ஓடைகளும் அங்கு விளைந்திருக்கும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்களின் பொதுவான நம்பிக்கையாக உள்ளது
கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து நீரோடை மற்றும் காட்டாறுகளை கடந்து 7 கிலோ மீட்டர் கரடு முரடான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள தாணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப்பாறை ஓடை ஆகிய வற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலையேற தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும் வரும் நாட்களிலும் மழைப்பொழிவு மற்றும் ஓடையில் நீர்வரத்தை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b