அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம்
சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மக்கள் பிரசார பயணத்தை
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம்


சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மக்கள் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது வரை 170-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ 25) ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாவட்டத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் திருத்தப்பணிகளை பணியாளர்கள் எந்த அளவிற்கு மேற்கொண்டு வருகிறார்கள். எந்த மாதிரியான பிரச்சனைகள் மாவட்டங்களில் இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு கையாண்டு வருகிறார்கள் என்பது குறித்து விரிவான ஆலோசனையினை மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.

ஏற்கனவே மாவட்ட செயலாளர்களிடம் பூத் கமிட்டி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருந்த நிலையில், இன்று காணொலி காட்சி வாயிலாகவும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் அவர் டிச 10-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு-பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் வெற்றி வாய்ப்பு, கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hindusthan Samachar / vidya.b