கோவையில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு
கோவை, 25 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் பூத் லெவல் அதிகாரிகளை மிரட்டி திமுகவினர் வாக்காளர் படிவங்களை பறித்து செல்வதாக புகார்கள் வந்
Former minister and AIADMK headquarters secretary S. P. Velumani personally inspected the special intensive voter list revision camp being held in Coimbatore.


கோவை, 25 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு இடங்களில் பூத் லெவல் அதிகாரிகளை மிரட்டி திமுகவினர் வாக்காளர் படிவங்களை பறித்து செல்வதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கும் சூழ்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சுண்டக்காமுத்தூர், 89 வது வார்டில் நடைபெற்றுவரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்களை நேரில் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாக்காளர்களிடம் குறைகேட்டறிந்தார்.

முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் இந்த திடீர் கள ஆய்வால் வாக்காளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Hindusthan Samachar / V.srini Vasan