கனமழையால் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம் - திருவாரூர் விவசாயிகள் வேதனை
திருவாரூர், 25 நவம்பர் (ஹி.ச.) தொடர் மழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 20,000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைதுள்ளன. முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு தாலுகாக்களில் 20,000 ஏக்கர் பயிர்கள் மழ
கனமழையால் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம் - திருவாரூர் விவசாயிகள் வேதனை


திருவாரூர், 25 நவம்பர் (ஹி.ச.)

தொடர் மழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 20,000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைதுள்ளன. முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு தாலுகாக்களில் 20,000 ஏக்கர் பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளன.

மேலும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய பொருளாதார இழப்பை நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 942 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. மேலும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 795 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b