ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் -கனிமொழி எம்.பி
தூத்துக்குடி, 25 நவம்பர் (ஹி.ச.) தாமிரபரணி ஆற்றில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, ஏரல் உயர்மட்ட பாலத்தின் வடப்பகுதியில் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்தது. தற்போது அந்த பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போ
கனிமொழி


தூத்துக்குடி, 25 நவம்பர் (ஹி.ச.)

தாமிரபரணி ஆற்றில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, ஏரல் உயர்மட்ட பாலத்தின் வடப்பகுதியில் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்தது.

தற்போது அந்த பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது.

தற்போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டத்தில் பழைய பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுகிறது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதையடுத்து கனிமொழி எம்.பி ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு வந்தார்.

அவர் உயர்மட்ட பாலம் மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பழைய பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆற்றுப்பாலத்திற்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுக்க பாலத்தின் அருகில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அவர் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

தாமிரபரணி ஆற்றில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த பிறகு ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நிகழ்விடம் மழையால் சேதம் அடைவது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவேன்’ என்றார்

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா, தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J