கொடுங்கையூர் குப்பை கிடங்கு மறுசீரமைப்பு- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.) வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குவிந்துள்ள பழைய கழிவுகளை அகற்றி நிலத்தை மீட்கும் பெரும் திட்டத்திற்கு நிதி திரட்ட பசுமை நகராட்சி பத்திரங்கள் வெளியிட அனுமதி அளித்து நகராட்சி நிர்வாக துறை சார்பில் அரசாணை வ
Kuppai


Let


சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)

வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குவிந்துள்ள பழைய கழிவுகளை அகற்றி நிலத்தை மீட்கும் பெரும் திட்டத்திற்கு நிதி திரட்ட பசுமை நகராட்சி பத்திரங்கள் வெளியிட அனுமதி அளித்து நகராட்சி நிர்வாக துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நகரின் முக்கிய குப்பை கிடங்காக செயல்பட்டு வரும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 342.91 ஏக்கர் சதுப்பு நிலப்பகுதியில் 252 ஏக்கர் பரப்பளவில் கழிவுகள் பரவியுள்ளன.

நவீன ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த குப்பை கிடங்கில் மொத்தம் 66.52 லட்சம் டன் (66 லட்சத்து 52 ஆயிரம் டன்) கழிவுகள் குவிந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பயோமைனிங் என்பது அறிவியல் முறையில் பழைய குப்பைகளை தோண்டி எடுத்து, அதில் இருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்து, மீதமுள்ள கழிவுகளை சரியான முறையில் செயலாக்கம் செய்யும் நவீன தொழில்நுட்பமாகும், தற்போது இந்த பணி கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நடந்து வருகிறது,

மத்திய அரசின் ஸ்வச்பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.646.38 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சென்னை மாநகராட்சி தனது பங்கான 59% நிதியை திரட்ட பசுமை பத்திரங்கள் மூலம் திட்டமிட்டுள்ளது.

பசுமை பத்திரங்கள் என்பது சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் திட்டங்களுக்கு மட்டும் நிதி திரட்ட வெளியிடப்படும் சிறப்பு பத்திரங்கள்.

முதலீட்டாளர்கள் இந்த பத்திரங்களை வாங்கி மாநகராட்சிக்கு நிதி தருவார்கள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியுடன் அந்த தொகை திரும்ப செலுத்தப்படும், இந்திய பங்குச்சந்தை வாரியமான செபியின் (நகராட்சி கடன் பத்திரங்கள் வெளியீடு மற்றும் பட்டியலிடல்) விதிமுறைகள் 2015-ன் கீழ் சென்னை மாநகராட்சி இந்த பத்திரங்களை வெளியிடும்.

இந்த விதிமுறைகளின்படி, பத்திரங்கள் வெளியிடும் நகராட்சி, பத்திர முதலீட்டாளர்களுக்கு அல்லது பத்திர அறக்கட்டளைக்கு குறிப்பிட்ட சொத்துக்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் அல்லது அடமானம் வைக்க வேண்டும்,

பத்திர முதலீட்டாளர்களுக்கு முதல் தொகையும் வட்டியும் திரும்ப செலுத்த, சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மற்றும் தொழில் வரி வருவாய் பாதுகாப்பு வைப்பாக வைக்கப்படும் என்று அரசு அனுமதித்துள்ளது.

நிதி பங்களிப்பு விவரம்:

மத்திய அரசு: மொத்த செலவில் 25% (சுமார் ரூ.161.60 கோடி)

மாநில அரசு: மொத்த செலவில் 16% (சுமார் ரூ.103.42 கோடி)

சென்னை மாநகராட்சி: மொத்த செலவில் 59% (சுமார் ரூ.381.36 கோடி)

ஜெர்மன் அரசின் கே.எப்.டபுள்யு வளர்ச்சி வங்கியின் வெளிநாட்டு நிதி உதவியும் கிடைக்கும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது..

Hindusthan Samachar / P YUVARAJ