Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
மயிலாப்பூர் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் முழுமையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி பாதிக்கப்பட்ட வைப்பீட்டாளர்கள் மயிலாப்பூர் சித்திரை குளம் காந்தி சிலை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முகம்,
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் ஏற்கனவே இருந்த இயக்குனர் குழு தலைவராக இருந்த தேவநாதனுடைய மோசடி நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய பாதிப்புக்கும் பொருளாதார இழப்புக்கும் ஆளாக இருக்கிறார்கள்.
தேவநாதன் மோசடி தெரிய வந்ததற்கு பிறகு ஏறத்தாழ நாலாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் முறையாக வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
வழக்குப்பதிவு செய்து பத்தாண்டுகள் ஆன பிறகும் இன்றுவரை அந்த வழக்கில் எந்தவித தீர்ப்பும் எட்டப்படாமல் நீதிமன்றத்திலேயே காலம் கடத்துகிறார்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரும் காலம் கடத்துகிறார்கள்.
இதில் முதலீடு செய்த ஏராளமான வயது முதிர்ந்தவர்கள் தங்கள் ஓய்வு காலத்தை ஓய்வாக கழிக்க பயன்படும் என்று பிரிவு சேர்ப்பது போல் சேர்த்த பணத்தை ஒற்றை நபர் மோசடி செய்து சென்றிருக்கிறார்.
பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் புகார் செய்த அனைத்து புகார் மீதும் குற்றப்பிரிவு தாக்கல் செய்வதற்கு பதிலாக ஒரு சிலர் புகாருக்கு மட்டுமே குற்ற பிரிவு தாக்கல் செய்திருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்ற நிபந்தனைகளை நிறைவேற்றாத நிலையில் தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழக அரசுக்கு இதிலிருந்து கேட்டுக்கொள்வது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இதில் முறையாக விசாரணை நடத்தவில்லை பாதிக்கப்பட்ட அனைவரையும் விசாரணையில் உட்படுத்தவில்லை மோசடி செய்யப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை.
பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை தொடர்பாக தனி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
மயிலாப்பூர் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக வழக்குகளை விரைவாக விசாரிக்க தீர்ப்பளிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
இடைக்கால நிவாரணமாக தேவநாதன் சொத்துக்களை பறிமுதல் செய்து பண்ட் முதலீடு செய்த அனைவருக்கும் ஒரு பகுதி நிதியை வழங்குவதற்கு இடைக்காலமாக ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் பொருளாதார குற்றங்கள் ஈடுபடும் நபர்கள் மீது புகார்களை விசாரணை செய்வதில் மிகுந்த மெத்தனத்தோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் நடந்து கொள்கின்றனர் என்று நான் குற்றம் சாட்டுகிறேன் இது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியும்.
ஒருவேளை காவலர்கள் புலனாய்வு குழுக்கள் குறைவாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஏற்ப புலனாய்வு அதிகாரிகள் காவல்துறை எண்ணிக்கையை உயர்த்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
உங்கள் கோரிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும் அவர்கள் சேமித்த நிதியும் தாமதம் இல்லாமல் எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக கிடைக்க செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சேர்ந்தவர்கள் இதுபோல் புகார்கள் வந்தால் அவர்களுக்கு சாதகமான வாய்ப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதைவிட மோசடி செய்த நபர்களிடம் இருந்து எவ்வளவு கறக்க முடியும் என்ற வகையில் தான் அவர்கள் அணுகுமுறை உள்ளது அதனால் தான் அதற்கு விசாரணை செய்ய தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
காவல்துறையில் நிறைய பிரிவுகள் உள்ளன அதில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ