என்எல்சி சுரங்கப் பகுதியில் கனமழை - நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்
கடலூர், 25 நவம்பர் (ஹி.ச.) நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகிய மூன்று திறந்த வெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்ட
Neyveli Coal Works


கடலூர், 25 நவம்பர் (ஹி.ச.)

நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் உள்ளது.

இங்குள்ள சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகிய மூன்று திறந்த வெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. என்எல்சி சுரங்கங்கள் உள்ள பகுதியிலும் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.

சுரங்கங்களின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மின் உற்பத்திக்கு எந்தவித பாதிப்பு இல்லை. சுரங்கங்களில் தேங்கியுள்ள உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் என்எல்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் மழையால் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN