ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வாய்ப்பு
சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.) தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள், ஐஐடி கல்வி எப்படி இருக்கும் என பார்க்க விரும்புகிறவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் நவீன தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தை அறிந்துகொள்ளும் வக
ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வாய்ப்பு


சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)

தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள், ஐஐடி கல்வி எப்படி இருக்கும் என பார்க்க விரும்புகிறவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் நவீன தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை ஐஐடி ஓபன் ஹவுஸ் 2026-ஐ ஜனவரி 2 முதல் 4ம் தேதி வரை நடத்த உள்ளது.

அனைவருக்கும் ஐஐடி என்ற முன்னெடுப்பில் ஓபன் ஹவுஸ் நிகழ்வில் ஆய்விற்கான வசதிகளையும், கட்டமைப்புகளை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும். 80 கண்காட்சி அரங்குகள், 18 கல்வி துறைகளை உள்ளடக்கிய 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.

கடந்த ஆண்டு நடந்த நிகழ்வில் சுமார் 35 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். தொடர்ந்து, இந்தாண்டு 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் 60 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் https://www.shaastra.org/open-house என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b