Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.)
மத்திய அரசின் நிதிக் கொள்கையின் அடுத்த ஐந்து ஆண்டு திட்டத்தின் அடிப்படையில், 2.5 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் இலக்கை எட்ட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
தேசிய நிதிக் கொள்கையின் முதல் கட்ட திட்டத்தில், 1.23 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1 லட்சம் கோடி மட்டுமே திரட்டப்பட்டது.
இரண்டாம் கட்டத் தில், 2.5 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் இலக்கை எட்ட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதில், கதி சக்தி சரக்கு முனையங்கள், ரயில்வே ஸ்டேஷன்களை சீரமைத்தல், டில்லி, கொல்கட்டா போன்ற நகரங்களில் அதிக மதிப்புள்ள நிலப்பகுதிகளின் வணிக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
புதிய ஐந்தாண்டு இலக்கை வைத்து, அதன் உள்கட்டமைப்பு முழுதும் தனியார் முதலீட்டை அதிகரிக்கவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM