சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்
சென்னை, 25 நவம்பர் (ஹி.ச) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கிய
Sir


சென்னை, 25 நவம்பர் (ஹி.ச)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நவம்பர் 18 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் உதவி மையம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஏராளமான வாக்காளர்கள் தங்களது எஸ்.ஐ.ஆர் வடிவத்தை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

வாக்காளர் உதவி மையத்தில் தங்களது படிவங்களை சமர்ப்பிக்காத வாக்காளர்கள் தொலைபேசி வாயிலாக BLO களை தொடர்பு கொண்டு தங்களது படிவத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் பி எல் ஓ நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும் படிவங்கள் பெற்ற வாக்காளர்களின் தொலைபேசி எண்கள் BLO விடம் இருக்கும்.

எஸ் ஐ ஆர் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த நபர்களும் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ