Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் அலுவலகங்கள் உள்ளது.
அதேபோல நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 தளம் கொண்ட கட்டிடத்தில் அரசின் 54 துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுமார் 5,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலங்களில் பணியாளர்கள் காலை 10 மணி முதல் 6 மணி வரை அலுவலக நேரம்.
மனித வள மேலாண்மை துறையில் முதல் முறையாக வருகை பதிவிக்காக பயோமெட்ரிக் மற்றும் முக அமைப்புடன் கூடிய தொடுதிரை கொண்டுவரப்பட்டுள்ளது.
பணியாளர்களின் வருகை இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
அரசு அலுவலர்கள் பணிக்கு வந்து இதை பயன்படுத்தி வருகைப் பதிவை உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது
மனித வள மேலாண்மை துறை போல மற்ற துறைக்கும். பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ