Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலையில், கார்த்திகை தீபம் விழா பாதுகாப்புக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தமிழக டிஜிபி-யும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் திரள்வர் என்பதால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பக்தர்கள் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம் நடப்பாண்டும் பின்பற்றப்படும் என தமிழக டிஜிபி அறிக்கை தெரிவித்துள்ளார்.
தீபம் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளிக்க கோவிலில் 26 இடங்களில் எல் இ டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏழு மருத்துவக் குழுக்கள் நியமிக்க சுகாதாரத் துறையை கேட்டுக் கொண்டுள்ளோம் என தமிழக டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வழக்கின் விசாரணை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ