Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி, 26 நவம்பர் (ஹி.ச.)
இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காசி தமிழ் சங்கமம் மூலம் ஒரு மாத காலத்துக்கு இன்றைய வாரணாசியான காசியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
அறிஞர்கள் இடையே கல்வி ஞான பரிமாற்றங்கள் - கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவை இந்த சங்கத்தின் அங்கமாக நடைபெறும் என்று செய்திக்குறிப்பு கூறுகிறது.
காசியில் உள்ள வர்த்தகம், ஆன்மிக தலங்களை பார்வையிடுதல், கர்நாடக சங்கீதம், கிராமிய கலைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள இணைப்புகள், இரண்டு பகுதிகளின் பாரம்பரிய அறிவு, கலை, தொழில், விவாதங்கள், கருத்துரைகள்,வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் உரைகள் நிகழ்த்தப்படும்.
சங்கமத்தின் முடிவில், தமிழ்நாட்டு மக்கள் காசியின் ஆழமான அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் அதுபோல காசி மக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், வருகைகள், உரையாடல்கள் போன்றவற்றின் ஆரோக்கியமான அறிவுப்பகிர் அனுபவங்களின் பரிமாற்றத்தின் மூலம், தமிழகத்தின் கலாசார செழுமையை அறிந்து கொள்வார்கள் என்றும் இந்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / Durai.J