ஆம்பூரில் கார் உதிரி பாகங்கள் திருடிய 4 பேர் கைது!
திருப்பத்தூர், 26 நவம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்த ஹர்ஷத் என்பவர் கடந்த 22 ஆம் தேதி காஞ்சிபுரம் ஒரகடம் பகுதியில் இருந்து பெங்களூருக்கு, கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். ஆம்பூர் அடுத்த ஜமீன
Car Spare Parts Theft


திருப்பத்தூர், 26 நவம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியை சேர்ந்த ஹர்ஷத் என்பவர் கடந்த 22 ஆம் தேதி காஞ்சிபுரம் ஒரகடம் பகுதியில் இருந்து பெங்களூருக்கு, கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் உள்ள தாபா அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு, ஹர்ஷத் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

தாபாவிற்கு சாப்பிட வந்த இளைஞர்கள் சிலர் கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து, லாரியில் இருந்த 13 லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, லாரி ஓட்டுநர் ஹர்ஷத் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தாபாவில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கண்டெய்னர் லாரியில் இருந்து கார் உதிரிபாகங்களை குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஜூனேத்(22), ஷபீக் முகமது(19), முஹமது அஹமது(18), ஹபிபூர் ரஹ்மான்(18) ஆகிய 4 பேர் திருடி சென்றது கண்டுபடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்து போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN