பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்ட்ரல் -அரக்கோணம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல
பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)

பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) இரவு 11.30 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 2.30 மணி வரையில் (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்டிரல்) இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

* மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66009), திருவலங்காடு-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM