Enter your Email Address to subscribe to our newsletters

கிவ், 26 நவம்பர் (ஹி.ச.)
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார்.
இந்த திட்டத்தை நவ.27ம் தேதிக்குள் ஏற்க வேண்டும், இல்லாவிட்டால் அந்நாடுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தப் போவதாக டிரம்ப் கெடு விதித்து இருந்தார்.
டிரம்ப்பின் இந்தப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
இதனால், அமைதி திட்டத்தில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு, அதனடிப்படையில் அமைதி திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைதி திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட அம்சங்கள் ரஷ்யாவுடனான போரை நிறுத்துவதற்கான மிக ஆழமான ஒப்பந்தம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்படும் அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், போரை நிறுத்துவதற்கான ஆழமான ஒப்பந்தங்களாக விரிவுபடுத்த முடியும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் அதிபர் டிரம்பிடம் மேலும் தீவிர ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன். அமெரிக்காவின் பலத்திற்கேற்ப ரஷ்யா செயல்பட்டு வருகிறது. அமைதி திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து அதிபர் டிரம்புடன் ஆலோசனை நடத்த தயாராக உள்ளேன்.
அமைதி திட்டம் ஐரோப்பா பாதுகாப்பு முடிவுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதால் ஐரோப்பிய தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM