Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)
சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான தமக்கு ஜாமின் வழங்கக் கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு, 12பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுக்கள்,
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தமக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என பொற்கொடி தரப்பு தெரிவித்தனர்.
குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது
சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் காவல்துறை
தெரிவித்துள்ளது.
மூன்று மனுக்களையும் ஒன்றாக சேர்த்து டிசம்பர் மூன்றாம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும்
இந்த விசாரணையை டிசம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ