Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் சென்னை மாநகராட்சி ஆணையர் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி வா யிலாக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த இரண்டு மாதமாக மழை பெய்து இருந்தாலும், மிகப் பெரிய பாதிப்பு இல்லாமல் சரி செய்து தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறது.
வரும் 28,29,30 தேதிகளில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது, தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள் இதனால் 28ஆம் தேதி எந்த பக்கம் புயல் வருகிறது, என்பது தொடர்பாக வானிலை மையம் மிகச் சரியாக சொல்ல முடியும் என கூறியிருக்கிறார்கள்.
அதை எதிர்கொள்ளும் விதமாக சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டேன்.
புயல் வந்தாலும், மழை வந்தாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் தன்னார்வலர்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணி முன்னெடுக்க வேண்டும், அவர்களுக்கு தேவையான உணவு குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய உணவுகளை வழங்க தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு'வினர் தயார் நிலையில் உள்ளனர், மின்சார தடை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை தொடர்பாக நாளை தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ