கனமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலி, 26 நவம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவரும் நிலையில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதி
கனமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு


திருநெல்வேலி, 26 நவம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவரும் நிலையில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 9,266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 12,480 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் 131.95 அடியாக உயர்ந்திருந்தது. இதுபோல் 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106.27 அடியை எட்டியிருந்தது. அணைக்கு 4,972 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணை யிலிருந்து 4,305 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து மொத்தம் 16,785 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், காட்டாற்று வெள்ளம் மற்றும் தென்காசி மாவட்டம் கடனா மற்றும் ராமநதி அணைகளில் இருந்து வரும் தண்ணீர் என தாமிர பரணி ஆற்றில் 32,787 கன அடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

தொடர் வெள்ளத்தால் மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணையில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளிக்கவில்லை.

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b