இந்த மனது வேதனை என்பது உங்களைப் போன்றோருக்கு நன்றாக தெரியும் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கோவை, 26 நவம்பர் (ஹி.ச.) கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த
Former Minister Sengottaiyan held a press meet at Coimbatore Airport before departing for Chennai.


கோவை, 26 நவம்பர் (ஹி.ச.)

கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு, உறுப்பினர் கூட இருக்கக் கூடாது என்ற முறையில் உறுப்பினரை நீக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த மனது வேதனை என்பது உங்களைப் போன்றோருக்கு நன்றாக தெரியும் அதற்கு மேல் எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / V.srini Vasan