Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 26 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி புதுக்கிராமம் பிரதான சாலையில், உள்ள பிள்ளையார் கோவில் அருகில் கடந்த இரண்டு மாத காலமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மழை நீர் கால்வாயில் செல்ல முடியாமல் ஏ.எஸ்.கே.ஆர் கல்யாண மண்டபம் தெருவில் அனைத்து பாதாள சாக்கடை லைன்களும் நிரம்பி வழிகிறது.
இந்த கழிவு நீர் பிள்ளையார் கோவில் அருகே வந்து தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுகிறது. இந்த பகுதி வழியாக திருச்செந்தூரில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் அலுவலகத்திற்கு செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரின் தென்பகுதியில் இருந்து வாகனங்களுக்கு இது பிரதான சாலையாக விளங்குகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன.
எனவே இப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Hindusthan Samachar / vidya.b