தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கு சுமை தூக்கும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
விருதுநகர், 26 நவம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கியில் 3 நிரந்தர பணியாளர்களும் 15 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்
Porattam


விருதுநகர், 26 நவம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த கிடங்கியில் 3 நிரந்தர பணியாளர்களும் 15 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும்,சிவப்பு அட்டையில் இருந்து பச்சை அட்டை மாற்றக் கோரியும், உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க தாமதம் ஏற்படுகிறது.

மேலும் தொடர்ந்து இந்த போராட்டம் நீடித்தால் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

ஆகையால் உடனடியாக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J