கொலை வழக்கில் 70 -வயது மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
தேனி, 26 நவம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரின் வீட்டின் அருகே பெருமாயி என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளனர். இருவரின் வீட்டிற்கும் இடையே இருந்த பொது சுவரில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே
Theni Murder Case


தேனி, 26 நவம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரின் வீட்டின் அருகே பெருமாயி என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளனர்.

இருவரின் வீட்டிற்கும் இடையே இருந்த பொது சுவரில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதனால், இரு தரப்பும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்துள்ளனர்.

இதனால் மாரிச்செல்வம் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் மாரிச்செல்வம் ஏற்கனவே குடியிருந்த பகுதியில், உறவினர் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சிக்கு கடந்த ஆண்டு சென்றார்.

அப்போது அங்கு வந்த பெருமாயி மூதாட்டி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மாரிச்செல்வத்தின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் மாரிச்செல்வத்திற்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்கள் ஐசியூவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மூதாட்டி மீது தேவாரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை முடிவற்ற நிலையில் 70 வயது மூதாட்டி பெருமாயி குற்றவாளி என நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பளித்தார்.

மேலும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒருமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN