வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்
திருநெல்வேலி, 26 நவம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம், பழைய பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜேம்ஸ் பால் என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் தனது மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுள்ளார். அவரது வீடு பூட்டப்பட்ட
Thief Letter


திருநெல்வேலி, 26 நவம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம், பழைய பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜேம்ஸ் பால் என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

அவர் தனது மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுள்ளார்.

அவரது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை நோட்டமிட்ட நபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளார்.

வீட்டில் இருக்கும் நகை, பணம் என அனைத்தையும் திருடிச் செல்லலாம் என்று அவர் நினைத்துள்ளார்.

ஆனால் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததுள்ளது.

அதாவது அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்த திருவன் முழுவதுமாக தேடியுள்ளார்.

ஆனால், அதில் நகை, பணம் என எதுவும் இல்லாமல் இருந்துள்ளது.

திருட வந்த இடத்தில் எதுவும் கிடைக்காத நிலையில், விரக்தியடைந்த அந்த நபர் வீட்டின் உரிமையாளருக்கு நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அதில், வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல.

அடுத்த தடவ என்னைய மாதிரி யாராச்சும் திருட வந்தா, அவர்களையாச்சும் ஏமாத்தாம காசு வைக்கவும். ஒத்த ரூபாய் கூட இல்லாத வீட்டுக்கு இத்தன சிசிடிவி கேமரா வேற. போங்கடா.. என்னை மன்னித்து விடுங்கள்.. இப்படிக்கு திருடன் என்று அந்த நபர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN