Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 நவம்பர் (ஹி.ச.)
மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவ., 26ல், பயங்கரவாத தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்.
இந்த தாக்குதல் நடந்த தினமான இன்று (நவ.,26) அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
2008ம் ஆண்டு இதே நாளில், பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கி, ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலைச் செய்தனர்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்ட துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த கோழைத்தனமான தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஒரு சாபக்கேடு.
பயங்கரவாதத்திற்கு எதிரான பா.ஜ., அரசின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கையை முழு உலகமும் பாராட்டுகிறது, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினர் ஆதரவை பெற்று இருக்கின்றன.
இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM