Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 26 நவம்பர் (ஹி.ச.)
கோவை ஈரோடு மாவட்டத்திற்கு களஆய்வு மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ 26) ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் அவர் செல்லும் வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சேலத்தில் இருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள் சங்ககிரியில் இருந்து திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, திண்டல், பெருந்துறை வழியாக கோவை செல்ல வேண்டும். கோவையில் இருந்து சேலம் செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிக்கோவில் பிரிவில் இருந்து கவுந்தப்பாடி, கிருஷ்ணாபுரம் பிரிவு, அம்மன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு பாலத்தில் இருந்து அதாவது ஈரோடு-சத்தி மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை, லட்சுமி நகர் வழியாக சேலம் செல்ல வேண்டும்.
மேட்டூரில் இருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள் அம்மாபேட்டை, அந்தியூர், அத்தாணி, கோபி, குன்னத்தூர், பெருமாநல்லூர் வழியாக கோவைக்கு செல்ல வேண்டும்.
காங்கேயத்தில் இருந்து அறச்சலூர் வரும் கனரக வாகனங்கள் சென்னிமலை வழியாகவும், கந்தசாமிபாளையத்தில் இருந்து ஓடாநிலை வழியாக செல்லும் வாகனங்கள் எலவநத்தம், வடுகப்பட்டி பிரிவு வழியாகவும், வெள்ளோட்டில் இருந்து அறச்சலூர் செல்லும் வாகனங்கள் கள்ளுக்கடை மேடு, மாரியம்மன் கோவில், அவல்பூந்துறை, கனகபுரம் வழியாகவும்,
எழுமாத்தூரில் இருந்து ஈரோடு வரும் வாகனங்கள் சந்தை குட்டை, காசிபட்டி வழியாகவும், சென்னிமலை கைகாட்டி வழியாக அறச்சலூர் வரும் வாகனங்கள் மேற்கு தலவுமலை வழியாகவும் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்தை அனைவரும் கடைபிடித்து சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b