இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முழுமையாக பின்பற்றிட உறுதி ஏற்கவேண்டும் - டிடிவி தினகரன்
சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.) இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றப்பட்ட நாளான இன்று இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முழுமையாக பின்பற்றிட உறுதி ஏற்கவேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அ
Ttv


Twe


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றப்பட்ட நாளான இன்று இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முழுமையாக பின்பற்றிட உறுதி ஏற்கவேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தோடு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையையும், கடமையையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினம் இன்று

வேற்றுமையில் ஒற்றுமை எனும் உன்னத கோட்பாட்டை பின்பற்றி தொலைநோக்கு பார்வையுடன் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் உட்பட சிந்தனையாளர்கள் அனைவரின் பங்களிப்பையும் போற்றி வணங்குவதோடு, அதில் இடம்பெற்றிருக்கும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முழுமையாக பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ