Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனது இந்திய அரசியலமைப்பு தின வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்.
மேலும் அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
1947-ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின், 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட வரைவுக் குழு, டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் தலைமையில் 2 ஆண்டு 11 மாதம் 18 நாட்கள் உழைத்து, உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பை உருவாக்கியது.
1949 நவம்பர் 26-இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26-இல் நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம், இந்தியாவை ஒரு இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசாக மாற்றியது.
நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக ஏற்றத்தாழ்வுகளினால் பிளவுபட்டு இருந்த தருணத்தில் சாதி, மதம், மொழி, பாலின பேதமின்றி நாம் அனைவரும் சமம் என்று ஓங்கி உரைத்து உலகிற்கே முன்மாதிரியான ஜனநாயக ஆவணமாகத் திகழ்கிறது.
இது வெறும் சட்ட நூல் அல்ல – இந்திய மக்களின் கனவு, போராட்டம், நம்பிக்கையின் உயிரோட்டமான வடிவம்.
இன்றைய தினத்தில் நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், சட்டத்தின் படி ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம், நியமான மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆகியவற்றைப் பேணிக்காப்போம் என்று உளமார உறுதி ஏற்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ